Headlines

ad34@hFacMC

சிறைகளில் வாடிக்கிடக்கும் தமிழ் இளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க பேதமின்றி அணி திரள்வோம் முல்லைத்தீவு சுதந்திர தின விழாவில் றிஷாட் அறை கூவல்!!1

சுஐப் எம் காசிம். இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில,; அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது சின்னஞ்சிறிய அழகான இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது…

Read More

முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (4) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ், இராணுவம், கடற்படை, வான் படைகளும் அவற்றின் உயர் அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்ட உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள்…

Read More

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு!!!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கலந்துரையாடினார். மேலும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read More

அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டி நேரிடுமென அறிவிப்பு

சுஐப் எம் காசிம் அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும் அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும்  அமைச்சர் மேலும் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற (2017.01.03) தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினராக அவர்…

Read More

முஸ்லிம் சமூகத்தை உசுப்பி தமது நோக்கத்தை நிறைவேற்ற நாசகாரிகள் துடிக்கின்றனர். – குருநாகலையில் அமைச்சர் றிஷாட்.

(அமைச்சின் ஊடகப்பிரிவு) அமைதியாக வாழுகின்ற – அவ்வாறே தொடர்ந்தும் வாழவிரும்புகின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்தி எம்மை சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் எமது சமூகத்தை உசுப்பிவிடுதன் மூலம் தங்கள் இலக்கினை அடைவதற்கு முயற்சிப்பதாகவும்; அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.. குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்கடர் ஷாபி தலைமையில் இடம்பெற்ற இந்தக்…

Read More

மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்துக்கு உலமா கட்சித்தலைவர் தனது கட்சி சார்பாகவே சென்றாரே தவிர இதற்கும் அமைச்சர் ரிசாதுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என உலமா கட்சித்லைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் கூறியதாவது, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் சொல்லியனுப்பியதாக சிலர் குறிப்பிட்டுள்ளமை மிகப்பெரிய அபாண்டமாகும். இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன். உண்மையில்; அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத்தெளிவுள்ள அரசியல்வாதியாகும். உலமா கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு கட்சியாக இணைந்து…

Read More

வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்!!!

மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டு நிறைவு கூறும் நிகழ்வு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக…

Read More

வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நறுவிலிக்குள மைதான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு வன்னி மாவட்;ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி தற்போது செயலுருப்பெற்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு வீருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச். எம். ஹரீஸ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற குழுக்களின்…

Read More

தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைமைகள் பொதுவான விடயங்களில் ஒன்றுபட வேண்டும் – யாழில் அமைச்சர் ரிஷாட் பகிரங்க அழைப்பு

சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் சகோதர சமூகங்களின் அரசியல் தலைமைகள் எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில்; சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். கண்காட்சியில் பிரதம விருந்தினராக…

Read More

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்!!!

(அமைச்சின் ஊடகப்பிரிவு) விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று மாலை (26. 01. 2017) திறந்து வைத்த நிகழ்வில் இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்…

Read More

வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனால் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது!!!

வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி போன்றன…

Read More

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகப் பணியகம் யாழில்!!!

பாறுக் ஷிஹான்–  இலங்கை வெளிவிவகார  அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்  இன்று முற்பகல் 10.30 மணியளவில்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால்  திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,  வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா ,…

Read More