Headlines

ad34@hFacMC

வர்த்தமானியில் மீள் பிரசுரிக்கப்பட்ட அரிசிக்கான உச்ச சில்லறை விலைகள்

அமைச்சின் ஊடகப்பிரிவு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர், றிஸாட் பதியுதீன் நேற்று(17) அரிசிக்கான உச்ச சில்லறை விலைகளை (MRP) வர்த்தமானியில் உடனடியாக பிரசுரிக்கும் படி கட்டளை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் வர்த்தமானியில் நேற்று நள்ளிரவு பிரசுரிக்கப்பட்ட  இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான  உச்ச சில்லறை விலைகள் கீழே தரப்பட்டுள்ளன.   இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி—– கிலோ ரூபா 72/= (மாற்றமில்லை) உள்நாட்டு உற்பத்தி நாட்டரிசி———— கிலோ ரூபா 80/= இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி———-கெக்குலு…

Read More

சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம். ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்.

சுஐப் எம் காசிம்   இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவீடனுக்கான ஏற்றுமதி என்ற தொனிப் பொருளிலான முன்னோடி அமர்வை நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில்…

Read More

மூதூர் சதொச 10 மணித்தியாளத்தில் ரூபா 611,000 விற்பனை செய்து சாதனை!!!

  (சுஐப் எம் காசிம்) கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் மூதூரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (12.02.2016) திறந்து வைக்கப்பட்ட 325 வது லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அதே தினம் ரூபாய் ஆறு இலட்சத்து பதினோராயிரம் விற்பனைப் புரள்வு, ஏறத்தாழ 10 மணித்தியாலங்களில் இடம்பெற்றுள்ளது. சுமார் 1000 நுகர்வோர்கள் இந்த நிலையத்தில் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இது வரை காலமும் சதொச நிறுவனமொன்றில் இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு தொகையான விற்பனை…

Read More

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம்- பிரதேச செயலாளருக்கு றிஷாட் பணிப்பு.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார். செட்டிகுளப் பிரதெச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற போது உதவிப் பிரதேச செயலாளர் முகுந்தனுக்கு அமைச்சர் றிஷாட் இந்தப்பணிப்புரையை விடுத்ததுடன், அமைச்சர்களும் எம்பிக்ககளும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் தவறாது பங்பற்றும் போது அதிகாரிகள் அசிரத்தைக் காட்டுவது கண்டனத்துக்குரியதென அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தவறாது அழைப்புக்களை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார். அமைச்சின் ஊடகப்பிரிவு.

Read More

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம்!!!

அமைச்சின் ஊடகப் பிரவு இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதெனவும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று (13.02.2017) ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இணைத் தலைவர்களான அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், மஸ்தான் எம் பி ஆகியோரின் தலைமையில்…

Read More

சமூக விடிவுக்காக ஒருமித்து பயணிக்கவும் தயார் தோப்பூரில் அமைச்சர் றிஷாட்!!!

சுஐப் .எம். காசீம் எண்ணற்ற | ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். தோப்பூரில் மக்கள் காங்கிரசின் கட்சிக் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். தோப்பூர் பிரதேச மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் ரஷாக் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற…

Read More

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்!!!

இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட தம்புள்ளை வர்த்தகர்களுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்டார் . தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வர்த்தகர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன் இந்த சந்தர்ப்பங்களின் போது பொலிசார் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக கவலை தெரிவித்தனர். அமைச்சர் இங்கு…

Read More

தட்டிக்கேட்டால் துரோகிகள்! ஜால்ரா போட்டால் போராளிகள்! கந்தளாயில் ரிஷாட்

-சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறுகளை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை கந்தளாயில் மக்கள் காங்கிரஸின் காரியாலய திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நானும், அமீர் அலியும், நஜீப் ஏ மஜீதும் அன்று தட்டிக் கேட்ட போது எங்களைத் துரோகிகளென…

Read More

சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/- பாவனையாளர் அதிகார சபை இன்று விலை நிர்ணயம். அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகின்றது (வர்த்தமானி இலக்கம் 2005/24) வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல் படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயத்தின் படி நாட்டரிசியின் ஆகக் கூடிய சில்லறை விலை கிலோ ரூபா 72/- ஆகவும்,…

Read More

கல்விக்கு கைகொடுத்தோர் என்றுமே போற்றப்படுகிறார்கள் வெள்ளவத்தை நிகழ்வில் அமைச்சர் றிஷாட்!!!

(சுஐப் எம் காசிம்) ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கும் கல்விக்கு கைகொடுத்தவர்கள் என்றுமே அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட வரலாறு கிடையாதென்றும் அந்த வகையில் வசதி படைத்தவர்கள் கல்விக்காக வாரிவழங்குவது சிறந்த பண்பாகுமெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு ஹமீட் அல் ஹ_சைனியா கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி குறித்த வேலைத்திட்டம் தொடர்பான கூட்டமொன்று கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றபோது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நிதியமைச்சர் ரவிகருணாநயக, எம்பிக்களான முஜிபுர்…

Read More

அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது..!!

நெதர்லாந்து ஹேக்யினை தலைமையகமாக கொண்டு இயங்கும் இரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய இரசாயன ஆயுதங்கள் மற்றும் கைத்தொழில் இரசாயன பிரிவு, ஆகியவற்றின் அனுசரனையில் அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது. 5நாள் பயிற்சி செயலமர்வு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இந்த நிறுவனத்தின் நெதர்லாந்து தடுப்பு பிரிவின் தலைவர் Shawn De caluwe அவர்களும் இந்நிகழ்வில்…

Read More

சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர். – புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் !!!

(சுஐப். எம். காசிம்) இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர் சூளுரைத்தார். புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியால வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிபர் லாபிர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம…

Read More