வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு இரத்துச்செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை.
ஊடகப்பிரிவு வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் கஷ்டங்களின் மத்தியிலே தமது பூர்வீகக்காணிகளில் குடியேறியிருக்கும் முசலிப் பிரதேச மக்களுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தலால் அவர்களது சுயாதீனமான இயல்பு…
