சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நேற்று திங்கட்கிழமை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமைலான…
