சம்மாந்துறை பெரிய ஹஸரத்தின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்
பெரிய ஹஸரத் என எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்படும் அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத் அவர்கள் வபாத்தான செய்தி தனக்கு கவலை அளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சம்மாந்துறையின் மூத்த ஆலிம்களில் ஒருவராகவும் தப்லீகுள் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபராகவும் பணியாற்றிய பெரிய ஹஸரத் சம்மாந்துறை மண்ணின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர். அந்த ஊரின் பெருமையை இவர் மூலம் துலங்கியது என்றால் அதற்கு மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. சம்மாந்துறை…
