உருளைக்கிழங்கு கிலோவொன்று 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானம்!
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவின் அமைச்சில் கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் எஸ்.எல்.நசீரின் தலைமையில், உருளைக்கிழங்குக்கு நியாயமான விலையை பெற்றுத்தருமாறு கோரி பதுளை மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் ஆர்பிக்கோ, கீல்ஸ், லங்கா சதொச ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பதுளை மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனவும், எதிர்வரும்…
