Headlines

ad34@hFacMC

புல்மோட்டை பிரதேசத்துக்கான தனித் தனியான பிரதேச செயலகம்,பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

அதிக சனத்தொகை செறிவுக்கு ஏற்பட்ட புல்மோட்டை பிரதேசத்துக்கான தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரூமான அப்துல்லா மஹரூம் தெரிவித்தார். புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து மக்கள் பாவனைக்கு இன்று (10) கையளித்து விட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர். துரித அபிவிருத்தியில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் அபிவிருத்திகளுக்கு தடையற்ற…

Read More

குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை ,குச்சவெளி,நிலாவெளி ஆகிய பகுதிகளில் இன்று புதிய வீதிகள் மற்றும் வடிகான் வசதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டு கையளிக்கப்பட்டது. கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் ஏற்பாட்டில் இவ் அபிவிருத்தி நிகழ்வுகள் யாவும் இடம் பெற்றன. புல்மோட்டை மையவாடி கொங்ரீட் வீதி, ரஹ்மான் நகர் வடிகான், நாவலடி…

Read More

கிழக்கு மாகாண ஆளுநருக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் நன்றி தெரிவிப்பு!!!

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளினதும் தவிசாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று அண்மையில் (18.01.2019) அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், முன்பள்ளி பாடசாலைகளை சபைகளின் அதிகாரத்தின் கீழ் முறைப்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள வசதிகளையும் சரிவர ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆளுனரிடம் முன்வைத்தார். அவற்றை உள்வாங்கிக் கொண்ட ஆளுனர் இன்று ; முன்பள்ளி…

Read More

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் ; முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து,உள்ளூர் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தத் தேவையான ஆலோசனைகள்.ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,உள்ளூர் அரசியல்வாதிகள் வீணான விமர்சனங்களிலிருந்து விடுபட்டு மக்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். முசலி தேசிய  பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பணம் மற்றும் இல்ல விளையாட்டு போட்டி என்பன நேற்று (09) இடம்பெற்ற போது  பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,  அரசியல் அதிகாரம் என்பது நிலையானது அல்ல. அதிகாரங்கள் இருக்கும் போதுதான் அபிவிருத்திகளையும்…

Read More

வெல்பொதுவெவ யுவதிகளுக்கான அமைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை குருநாகல் மாவட்டம் முழுவதும் அறிமுகம் செய்யும் வேலைத்திட்டங்கள் கடந்த சில வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல் தடவையாக வெல்பொதுவெவ பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸை அறிமுகம் செய்யும் நிகழ்வு மாவட்டத்தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது யுவதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களை அகில…

Read More

பொய்யான பிரசாரங்களால் நற்பெயருக்கு அபகீர்த்தி! 100 கோடி கோருகிறார் அமைச்சர் ரிஷாட்

மக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு ,கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்த,தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் லசந்த விக்கிரம சிங்கவிடமிருந்து ரூபா நூறு கோடி மான நஷ்ட ஈடாக வழங்குமாறு தனது சட்டத்தரணியூடாக அமைச்சர் ரிஷாத்பதியுதீன்  கோரியுள்ளார். வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து,வேறு வகையில் பொதியிட்டு அவற்றை இந்தியா உட்பட வேறு நாடுகளுக்கு .ஏற்றுமதி செய்து உள்ளுர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரும், அவரது சகோதரரும்…

Read More

யகம்வெல முஸ்லிம் வித்தியாளய இல்ல விளையாட்டுப்போட்டி.

2019ம் ஆண்டுக்கான ஆரிகாமம் யகம்வெல முஸ்லீம் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி பாடசாலையின் அதிபர் தலைமையில் ஆரம்பமானது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் விஷேட அதிதிகளில் ஒருவராக முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச கூட்டுத்தாபனத்தின் பிரதி தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்டத்லைவருமான எம்.என். நஸீர் கலந்து கொண்டார்.  

Read More

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (08) கலந்து கொண்டார். பாடசாலையின் அதிபர் ஆர் லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன், பிரதேச செயலாளர் உதயராசா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மது, மொஹிதீன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான பாரி, லரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாஷிமின் ஏற்பாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன் பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பேச்சு வார்த்தையில் , தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை , கொழும்பு தெற்கில் ஆண் பாடசாலை ஒன்றை அமைத்தல்,மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தல் ,கொல்லன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில்…

Read More

துறை முகங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு துறை முகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

துறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக அதிக அந்நிய செலவாணிகளை ஈட்டிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (08)  கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலானது துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் மற்றும் வர்த்தக வாணிப கைத்தொழில், கூட்டுறவுத் துறை நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல் அமைச்சரும் அகில…

Read More

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல்  பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இதன் போது, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் விரிவான ஆராய்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பைஷர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ்,…

Read More

தமது விடுதலைக்காக நன்றி தெரிவிக்கும் பெற்றோர்களும்,மாணவர்களும்

பாரதுாரமான குற்றத்தை செய்தார்கள் என்று தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் எண்மாரின் விடுதலை தொடர்பில் முயற்சிகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை கைதான மாணவர்களின் பெற்றோர்களும்,மாணவர்களும் தெரிவித்துள்ளனர். தங்களது விடுதலைக்காக உதவிகளை செய்தமைக்காக நேற்று பெற்றோர்கள் சிலரும்,மாணவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்தனர். மாணவர்கள் கைது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த விடயத்துக்கு பொறுப்பான…

Read More