Headlines

ad34@hFacMC

“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த  திட்டங்கள் ! அமைச்சர் ரிஷாட் வவுனியாவில் தெரிவிப்பு..  

கிட்டத்தட்ட  10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு  சதவீத பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான பங்களிப்பை இந்த மாகாணம் நல்குவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 2000 புதிய ஏற்று மதியாளர்களை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் வன்னி மாவட்டத்தில்  இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக  வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற  அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் சர்வதேச வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக்சமரவீர பிரதம விருந்தினராக…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திருகோணமலை ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலயத்திற்கான புதிய கனிஷ்ட விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது!!!

பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முகைஸ் தலைமையில் இடம் பெற்ற புதிய ஆய்வு கூடத்தை இன்று (01) துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார். பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் கலாசார ரீதியாக உற்சாக வரவேற்பளித்தார்கள். கல்வி அமைச்சின் “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத் திட்டம் 2016-2020 திட்டத்தின் கீழ் குறித்த ஒரு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட…

Read More

மியன்மார் முஸ்லிம்கள் நசுக்கப்படுவது போன்று இலங்கையிலும் அதே நிலை உருவாகக் கூடாது – அமீர் அலி.

மியன்மார் நாட்டில் முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டு அழிக்கப்படுவது போல் இலங்கையிலும் நடைபெறாமலிருக்க அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியிலுள்ள அரபுக் கல்லூரி ஒன்றுடன் அமைச்சர் இல்லத்தில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில், இதில் விசேடமாக அரபுக் கல்லூரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனென்றால் அதில் கல்வி கற்கும் ஒருவர்…

Read More

ஜனாதிபதிக்கு ரிப்கான் பதியுதீன் அவசர கடிதம்

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அடையாளமாக வடக்கில் பல காணிகள், ஆங்காங்கே விடுவிக்கப்பட்டு   மீளக்குடியேற்றங்கள் , சுய தொழில் ஊக்குவிப்புகள் ,அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தங்கள் மீதான நம்பிக்கை வலுவடைந்து வருகின்றது. நல்லிணக்க அடையாளங்களின் இம்முயற்சிகள் வடக்கில் உள்ள மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை,முள்ளிக்குளம்…

Read More

கலாவெவயில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக திறப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீமின் வேண்டுகோளுக்கு இனங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிராத்தித்தலைவருமான இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்படட நிதியொதுக்கீட்டில் கலாவெவ 491 குசலானகம துலானையில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட ஈச்சன்குலம் ஒழுங்கை வீதி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததனார்

Read More

கிண்ணியா கிராமப்புற பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா அல் அக்லா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது  (27) புதன் கிழமை பாடசாலை அதிபர் கே.பிர்தௌஸ் தலைமையில் இடம் பெற்ற இவ் விழாவில்  பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் கலந்து கொண்டார். பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்களால் இசை வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாடசாலை மைதானத்துக்கான பார்வையாளர்…

Read More

நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு

வவுனதீவு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட நவாற் தோட்ட விஷ்னு இளைஞர் கழகத்திற்கு கானி கொள்வணவு செய்வதற்கு நிதி கையளிக்கும் நிகழ்வு (25) இணைப்பாளர் மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு நிதியை கையளித்தார். இந்நிகழ்வுக்கு மாவட்ட இணைப்புச் செயலாளர் லோகநாதன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

கல்கமுவ மொடல் முஸ்லிம் மகாவித்தியாளைய கல்வி, அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையில் கல்கமுவ மொடல் முஸ்லிம் மகாவித்தியாளய அபிவிருத்தி மற்றும் கல்விக்கு உதவுதல் போன்ற விடையங்களை பாடசாலை நிருவாகத்துடன் கலந்து ஆராய்ந்து பாடசாலையின் எதிர்கால அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில். முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான எம்.என்.நஸீர்  அவர்கள்  (26 – 02 – 2019) பாடசாலை அபிவிருத்தி குழுவின் அழைப்பின் பேரில் பாடசாலைக்கான…

Read More

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

உணவு பதணிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ தொடர்ந்து அதன் உற்பத்தித் துறைக்கான நாட்டின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வாக மாறியுள்ளது. உணவு பொதியிடலுக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி  2001 ஆம் ஆண்டில  தொடங்கப்பட்டது….

Read More

கிண்ணியா அல்மினா பாடசாலைக்கான புதிய இரு மாடிக் கட்டிடம் பிரதியமைச்சரால் திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட தி/கிண்/ அல்மினா மகாவித்தியாலயத்துக்கான புதிய இரு மாடிக் கட்டிடத்தை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்  (27) உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற குறித்த கட்டிடம் பிரதியமைச்சரினால் திறந்து மாணவர்களின் பாவனைக்கு விடப்பட்டது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் PSD திட்டத்தின்  கீழ்  உள்ள  நிதி ஒதுக்கீட்டில் சுமார் 95 இலட்சம் ரூபா செலவில்  பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில்  குறித்த…

Read More

கிண்ணியாவில் இயங்கும் இலங்கை மின்சார சபை பிரதேச காரியாலயம் எவ்வித வசதிகளுமின்றி பல குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது

திருகோணமலை மாவட்டத்துக்கு மின் சக்தி, எரிசக்தி மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச தலைமையிலான குழுவினர் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயத்தை (27) புதன் கிழமை  மேற்கொண்டுள்ள அமைச்சர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை மின்சார சபை உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பு மாத்திரம் அபிவிருத்தி அடைய வேண்டும்…

Read More

மாவடிப்பள்ளியில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள் வழங்கி வைப்பு!

அ.இ.ம. காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் 2017ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில் விசேட முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்…

Read More