Headlines

சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்க வர்த்தகக் குழு சீனா பயணம்!




சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக உத்தியோக பூர்வ வர்த்தக குழுவொன்று (23-06-2015) சீனா பயணமாகி உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் தெரிவித்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இலங்கையின் மிளகு மற்றும் வாசனைத்திரவியங்கள் ஏற்றுமதியாளர்கள் பங்குபற்றுவதாகவும் மரைக்கார் தெரிவித்தார்.

சீனாவில் நடைபெறும் வாசனைத்திரவியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றவதற்காக உயர்மட்ட வாசனைத்திரவிய ஏற்றுமதியாளர்கள் குழுவொன்று மாறுபட்ட சந்தை வாய்ப்புக்களை பற்றி கண்டறிவதற்காகவூம் தெற்கிழக்காசிய நாடுகளின ஏற்றுமதி வாய்ப்பபை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காகவூமே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளது.

மிளகு உற்பத்தி வேலைத்திட்டம் மற்றும் சந்தை விரிவாக்கத்துக்காக துறைசார்ந்தோருக்கு ஒத்தாசையாக திகழ்வதே ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெறும் சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்கும் பட்டியலிடப்பட்ட வாசனைத்திரவியத் துறைசார் முக்கிய பிரதிநிதிகளுடான கூட்டம் அண்மையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 10க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களைச்சேர்ந்த பிரபல வர்த்தக பிரதிநிதிகள் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதாக யூசுப் மரைக்கார் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *