Headlines

காணாமல் போதல் தொடர்பான ஐ.நா குழு இலங்கை வருகிறது




பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை இக்குழு இலங்கையில் விஜயம் செய்யவுள்ளது.

பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் 6ம் திகதி ஆரம்பித்து 15ம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையில், ஐவர் அடங்கிய குழு இலங்கை வரவுள்ளது.

30 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற காணாமல் போதல் தொடர்பான 400 முறைப்பாடுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *