Headlines

சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் CID தொடர்ந்து விசாரணை!….

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். முன்னாள் ஆட்சியின் போது ஜனாதிபதி அலுவலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தியதாக சஜின்வாஸ் குணவர்த்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (11) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

Read More

சவூதி அரசால் வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்கள் பெறுவதற்கு யாழ் முஸ்லீம் மக்கள் பெரும் சிரமம்……

பாறுக் ஷிஹான் சவூதி அரசாங்கத்தினால் நோன்பு காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்கள்  பெறுவதற்கு யாழ் முஸ்லீம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர். யாழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட மக்களிற்கு மேற்குறித்த பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு என்றுமில்லாதவாறு குடும்பவிபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் கடிதம் மூலமாக கேட்டுள்ளார். அத்துடன் குடும்ப விபரங்கள் அவசியமாகவுள்ளதுடன் இதன்படி குடும்ப தலைவர்.தலைவி பெயர்,அடையாள அட்டை.முகவரி ,குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை என்பன அதில்…

Read More

எரிபொருள்களுக்கு தட்டுப்பாடில்லை!

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப் போவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ள மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, நாட்டில் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, எரிபொருள்களின் விலையை அதிகரிப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதற்கு ஒரு போது இடமளிக்கப்படமாட்டாது என்றும் அது அறிவித்துள்ளது. எரிபொருள் மாபியாக்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்களை நம்பவேண்டாம் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

Read More

மட்டு.மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

ஜவ்பர்கான்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி, ஏத்துக்கால்,பூநொச்சிமுனை, பாலமுனை, நாவலடி, பாலமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன. இதனால் கடல் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடற்றொழிலாளர்கள் தமதுபடகுகளையும் வள்ளங்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இடம்மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம்மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கடும் மழை பெய்துள்ளது.24 மணிநேரத்தில்…

Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் அமைச்சர் பெளசியின் மகன் நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு….

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி இனிமேல் படம் வரைய மாட்டேன் : சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் கேலி சித்திர ஓவியர் ரொனால்ட் லோஸியர் அறிவிப்பு….!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி நபிகள் நாயகம்ம் அவமதித்து கேலி சித்திரம் வரைந்த சார்லி ஹெப்டோவின் தலைமை ஓவியர் மனம் திருந்தினார் இனி நபிகள் நாயகத்தை அவமதிக்கும் விதத்தில் எந்த கேலி சித்திரத்தையும் வரைய மாட்டேன் என்றும் அறிவித்தார். சார்லி ஹெப்டோ என்ற பிரான்ஸ் நாட்டை சார்ந்த கேலி சித்திர பத்திகை 2006 ஆம் ஆண்டில் இருந்தே நபிகள் நாயகம் தொடர்ப்பான பல்வேறு கேலி சித்திரங்களை வரைந்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்தது அனைவரும் அறிந்த விசயம் இந்த…

Read More

அம்பியூலன்ஸ் வண்டிக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்று காலை தெரணியகல வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸ் வாகனமொன்றை பின்னால் எடுக்க முற்பட்ட போது நடந்த விபரீதம்.

Read More

லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட – லுனுவல பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வல்லபட்டை கொண்டு சென்ற ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது அவரிடம் 2000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஓப்பனாயக்க பொலிஸ் நிலைய சார்ஜன் இன்று பலாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Read More

கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து!

பிரித்தானிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், பிரித்தானியாவுடன் இலங்கை மிக நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இடியுடன்மழை!

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (11) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நாட்டின் பல்வேறு கரையோரங்களிலும் காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம் காணப்படுகிறது.  மேலும் வடக்கு மற்றும் கிழக்கு  கடலோரங்களில் காலையில்  மழைக்கான சாத்தியம் நிலவும் குறிப்பாக புத்தளம் மாத்தறை கொழும்பு ஊடாக காலி முதலான கடலோரங்களில் காலையில் மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய…

Read More

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு வழக்கு பின்னணி: 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற…

Read More