Headlines

சாய்ந்தமருதில் ஆடை கைத்தொழில் பயிற்சி நிலையம் திறப்பு




எஸ்.அஸ்ரப்கான்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட ஆடை கைத்தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா இன்று (04) திங்கட்கிழமை அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கலந்து கொண்டு இந்நிலையத்தினை திறந்து வைத்தார்.
கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது அமைப்பாளர் எஸ்.ரீ. கபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கட்சியின் நாவிதன்வெளி, மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதிர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் தொழிலதிபர் அன்வர் முஸ்தபா ஆகியோருடன் இலங்கை பிடைவை மற்றும் ஆடை நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கட்சியின் இணைப்புச் செயலாளருமான ஏ.எம்.ஏ. லத்தீப், கட்சியின் கல்முனை இணைப்பாளர் ஏ.எல்.எம்.அஷ்ரப் ஆகியோரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப தலைவர் அஸீஸ், கட்சியின் முக்கியஸ்தர் ஜீனைதீன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.எல்.அன்ஸார், மத்திய குழுவின் முக்கியஸ்தர் இர்ஷாத் உட்பட தொழிற்பயிற்சியை பெறும் யுவதிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *