Headlines

இறக்காமத்தில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும்..




அப்துல் அஸீஸ்​ 

இறக்காமம்  பிரதேசத்துக்குட்பட்ட  வறிய குடும்பம்களை  சேர்ந்த யுவதிகலுக்காக  தையல் பயிற்சி நிலையம்   திறந்து வைக்கும் நிகழ்வும், இவ்விடயம் தொடர்பாக பயன் பெரும் குடும்பங்களை   விழிப்பூட்டும் கூட்டமும்  இறக்காமம் பிரதான வீதியில்   நேற்று மாலை   (03 ) இடம்பெற்றது.
இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையம்களின்   ஊடக இறக்காமம்  பிரதேசத்தில் உள்ள  வறிய குடும்பம்களை  சேர்ந்த  யுவதிகள் கட்டம் கட்டமாக  தொடர்சியாக  பயன்பெறவுள்ளனர்.
இறக்காமம்  பிரதேச  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர்  எ.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வீடமைப்பு  மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர்  அமீர் அலி ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம்  வை.எல்.எஸ்.ஹமீட், புடைவை மற்றும் ஆடைகள்நிறுவனத்தின்அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்,  கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகள் பொறுப்பாளர்  அன்வர் முஸ்தபா உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொன்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *