Headlines

கொழும்பை (புதுக்கடை) சேர்ந்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் கடலில் முழ்கி பலி




கொழும்பு , புதுக்கடை பிரதேசத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடலில் குளிக்கும் போது முழ்கியுள்ளனர்.

இதன்போது தந்தை காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் தாயும் பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

தாயாருக்கு 31 வயது எனவும், பிள்ளைகளுக்கு 10, 6, 2 வயது என தெரிய வருவதுடன் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *