Headlines

தலைக்கவச விவகாரம்: சுற்றறிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு




முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் (ஹெல்மெட்) பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரையிலேயே இந்த இடைக்கால தடையுத்தரவு, இன்று வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவர் தாக்கல் செய்த மனுவை, பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *