Headlines

ஹெல்மட்டுக்கு தடை என்றால் பர்தாவையும் உடனடியாக தடை செய்யுங்கள்: சிங்கள ராவய




முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு தடை என்றால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடையையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிங்கள ராவய இதனை குறிப்பிட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவ்வமைப்பு,

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கே முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்களுக்கு பொலிஸார் தடை விதிக்கின்றனர் என்றால் நாட்டில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்களுக்கு காரணமாக இருந்த பர்தா ஆடைக்கு பொலிஸார் என்ன செய்யப்போகின்றனர்.

குறிப்பாக கண்டி கட்டுகஸ்தோட்டை வங்கியில் இடம்பெற்ற கொள்ளையின் போது பர்தா உடையில் வந்தவர்களே கொள்ளையிட்டுச் சென்றனர்.

போதைப் பொருள் கடத்தல் செய்வோர், பாரிய குற்றங்களை புரிவோர் என பல கொள்ளைகாரர்கள் இந்த பர்தா ஆடையினுள்ளே ஒழிந்துள்ளனர்.

பர்தா உடையுடன் வீதியில் செல்லும் ஒருவர் ஆணா பெண்ணா என்பதை கண்டறிய பொலிஸார் எவ்வாறான அணுகுமுறைகளை தெரிந்து வைத்துள்ளனர் என்றால் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சத்துடன் செல்வோரையும் மக்கள் அறிந்துகொள்ளும் வழிவகைகள் இருக்கும்.

எனவே முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்களுக்கு தடை விதிக்கப்படுமாயின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பர்தா ஆடையையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *