Headlines

மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை




முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சுமார் ஒரு மணித்தியாலமாக நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒருசில கொலை சம்பவங்கள் குறித்து தாம் அறிந்திருப்பதாக அண்மையில் ஊடகங்கள் வாயிலாக மேர்வின் சில்வா கூறிய கருத்துகளின் பிரகாரம் விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

முன்னாள் அமைச்சரிடம், அவர் அறிந்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *