Headlines

அஸ்ஸலாமு அலைக்கும். சென்ற மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடக்க வில்லை. இது சம்பந்தமாக உங்களிடம் கதைக்குமாறு இன்று தெரிவித்தார்




சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரமணிய சாமி தமது கருத்துக்களை அறிக்கையாக சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் தாமும் சில கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணிய சாமி, 18ம் திகதிக்குள் கருத்துக்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதோடு இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்கக் கூடாது என்கிற திமுகவை சேர்ந்த அன்பழகனின் மனுவுக்கு, கர்நாடக அரசு, கர்நாடக உயர் நீதிமன்றம், ஜெயலலிதாதரப்பு வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் விளக்கம் அளிக்கக் வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *