Headlines

பொதுத் தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன்னர் இடம்பெறும் – ரவி கருணாநாயக்க




ஐக்கிய  தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க மொரட்டுவ சொ்ய்சாபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சொய்சாபுர அலுவலகத்தை திறந்து வைப்பதற்காகவும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காகவும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது இவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்

தற்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமே தவிர அரசியலுக்கு சேவையாற்ற வேண்டியதில்லை. இந்த அதிகாரத்தை சர்வாதிகார  ஆட்சியில் இருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் பெற்றுக் கொண்டது மக்களு்க்கு சேவையாற்றுவதற்கே. இதில் சிங்கள தமிழ் முஸ்லிம் என அனைத்து இன மக்களும் உள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன்னர் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *