Headlines

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி வாமிலா (24) மரணம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரியினல் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும்  மாணவி ஒருவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி  மாவட்டத்தின் மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த சி.வாமிலா (வயது 24)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த இந்த மாணவி,…

Read More

பலாங்கொடை பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு வந்த திடீர் சோதனை

பலாங்கொடை நகரில் அமையப் பெற்ற சிங்கள மொழி மூலப் பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் அணியும் நீண்ட காற்சட்டைக்கு பாடசாலை நிர்வாகம் திடீரென தடை விதித்தமையால் மாணவிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகி இருப்பதாக பெற்றார் கவலை தெரிவிக்கின்றனர். பலாங்கொடை பிரதேசத்தில் சிங்கள மொழி மூலத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளை இப் பாடசாலையிலேயே   பெற்றோர் சேர்க்கின்றனர். இப் பாடசாலையின் ஆரம்ப காலம் தொட்டு முஸ்லிம் மாணவியர் தமது கலாசாரத்திற்கு உகந்த ஆடையை அணிய பாடசாலை நிர்வாகம் அனுமதி…

Read More

ஹம்பாந்தோட்டையில் சீன பெக்டரியில் வேலை செய்த 300 ஊழியர்கள் ஆபத்தான நிலையில்

அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்டையில் வட்டான, நுங்கம எனும் பிரதேசத்தில் சீனநாட்டின் முதலீட்டில் பட்டரி உற்பத்தி செய்யும் பெக்டரியில் பணியாற்றிய 300 ஊழியர்களில் 23 பேருக்கு உடம்பில் ஈயம் உட்புகுந்துள்ளது. மேலும் 268 பேருக்கு 46வீதம் பெற்றறி ஈய நச்சுத் தன்மை உடம்பில் உட்புகுந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேற்படி விடயமாக இன்று(09) நாரேஹேன்பிட்டியில் உள்ள ஊழியர்கள் திணைக்களத்தில் நடாத்திய ஊடகவியாலாளர் மாநாட்டின்போதே மேற்கண்ட தகவலை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊழியர் திணைக்களத்தின் ஆணையாளர்,…

Read More

தாதியர் சேவையின் முறையற்ற நியமனங்களுக்கு எதிர்ப்பு

தாதியர் சேவையின் உயர்மட்ட பதவிகள் சில தொழிற்சங்க தலைவர்களின் தேவைக்கேற்ப நியமிக்கும் செயற்பாட்டில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தாதியர் பணிப்பாளர், மருத்துவமனை சேவையாளர் பதவிகளும் தொழிற்சங்க தலைவர்களின் வேண்டுதல்களுக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் விசேட தரங்களைக் கொண்ட பிரதான தாதியர் அதிகாரிகளுக்கான பதவிகளை…

Read More

ஆனந்தகுமார சுவாமி மாவத்தை மீண்டும் உயிர் பெறுகிறது

நெலும் பொக்குன மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட முன்னய ஆனந்த குமாரசுவாமி மாவத்தைக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த வீதிக்கு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை என்ற பெயரே அமுல்படுத்தப்படுத்தப்படும் என கொழும்பு மாநகர சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வொன்று நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதுடன். கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில் இதற்கான அழைப்பை…

Read More

நாளைய சவால்களை எதிர்கொண்டு செயற்படுவதே சிறந்தது -ஜனாதிபதி

நாளைய தினத்தின் சவால்களை பற்றி சிந்தித்து காலத்தை வீணடிப்பதை விடுத்து அதனை எதிர்கொண்டு இன்றைய செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தல் மேடையில் எவ்வாறு தலைகாட்டுவது என சிலர் தம்மிடம் கேள்வி எழுப்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றியமையே முக்கிய விடயமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியனேகோரலை பிரதேச மக்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே…

Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திருகோணமலை விஜயம்!

துகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று (08) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார். முதலாவதாக இலங்கை தரைப்படையின் 22 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு சென்றதுடன் அங்கு இரானுவத்தினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் திருகோணமலை மாவட்டம் இயற்கை எழில் துறைமுகத்தை கொண்டுள்ளமையால் சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற காரணமாக அமைவதுடன் வெளிநாட்டவர்களின் மனதையும் கவர்ந்துள்ளதாக அமைந்துள்ளது. 30 வருட கால யுத்தம் காரணமாக இம்மாவட்ட மக்கள் பல…

Read More

பொதுத் தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன்னர் இடம்பெறும் – ரவி கருணாநாயக்க

ஐக்கிய  தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க மொரட்டுவ சொ்ய்சாபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் சொய்சாபுர அலுவலகத்தை திறந்து வைப்பதற்காகவும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காகவும் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார் தற்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமே தவிர அரசியலுக்கு சேவையாற்ற வேண்டியதில்லை. இந்த அதிகாரத்தை சர்வாதிகார  ஆட்சியில் இருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் பெற்றுக்…

Read More

கட்சி அரசியலின்றி, நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் – பட்டலி சம்பிக்க ரணவக்க

கட்சி அரசியலின்றி, நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார். கொழும்பு தெமட்டகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறப்பிட்டார். இந்த கட்சி முறை என்பது இந்த நாட்டிலிருக்கும் பாரிய புற்றுநோயாகும். இந்த கட்சி முறைமையினால் நாம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, யூ.என்.பி, ஜே.வி.பி என பிரிந்து, பிரிந்து எமக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. இந்த…

Read More

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை – ரோசி சேனாநாயக்க

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும்  வகையில் சட்டங்களை  கடுமையாக்கவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுவருவதாக  அமைச்சர் தெரிவித்தார். சிறுவர்களை முறையாக பராமரித்து அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக இன்று நாட்டில் காணப்படும் நிலைமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க…

Read More

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏற்படும் விபத்துகளை ஆராய விசேட குழு

லக்ஷ்மி பரசுராமன் விளையாட்டில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் விபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் வாரம் நியமிக்கப்படவுள்ள இந்த குழுவில் விளையாட்டுப் பணிப்பாளர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளடங்குவரெனவும் அவர் கூறினார். அம்பலந்தோட்டை போலான மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் கடந்த 06ம் திகதி இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஈடுபட்டிருந்த வேளை, திடீரென மயங்கி மரணமுற்ற சம்பவம் தொடர்பில்…

Read More

டெங்கினால் காத்தான்குடியில் இருவர் பலி

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு காய்ச்சலினால் கடந்த இரண்டு தினங்களில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7 வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே காய்ச்சலினால் திடீரென உயிரிழந்துள்ளார். சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுமி சனிக்கிழமை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் குறித்த சிறுமி அங்கு…

Read More