Headlines

அக்கரைப்பற்று ஆலிம்நகர் ;14 வருடங்களாக மக்கள் பாவனைக்கு வழங்கப்படாமல் மூடப்பட்டிருக்கும் பல்கட்டிடம்




முகம்மட் இன்ஹாம்

அக்கரைப்பற்று ஆலிம்நகர் (5ம்கட்டை) கிராமத்தில் UNDP நிறுவனத்தினால் பல இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட பல்தேவைக்கட்டிடம் முறையாக ஆலிம்நகர் பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்புச்செய்யப்படாமல் சுமார் 14வருடமாக இழுத்து மூடியிருப்பதன் மர்மம்தான் என்ன……….?

அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான காரியாலயம், நடமாடும்சேவை, கிராமசேவையாளர் காரியாலயம், நலன் விரும்பிகளுக்கான மக்கள்சந்திப்பு இளைஞர்விவகாரம் தொடர்பான பயிற்சித்திட்டமென ஆலிம் நகரிலுள்ள மக்களின் பொதுவேலைகள் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் கொண்டுவரப் பொருத்தமான கடிட்டிடம் இதுவாகும்.

இதுவரைக்கும் அவ்வாறான செயற்திட்டம் தொடராக ஸ்திரப்படுத்தப்படாததால்; இக்கட்டிடம் கட்டியதில் இருந்து பயன்பாடற்று உடைந்து சேதப்பட்டு வருவதோடு அங்குள்ள மக்களும் கவனிப்பாரற்ற நிலையிலுள்ளனர்.

கிராமிய அபிவிருத்தி என்ற பெயரில் சேட்டைஉள்ளேவிட்டு பெல்ட்டை வெளியே கட்டிக்கொண்டு ஏழைகளுக்கு முன்னால் வாய் கிழிய பெருமை பேசி விட்டு கிராமியமக்களின் வறுமைகளை விற்று வயிறு வளர்க்கும் கொள்ளைக் கோஷ்டிகளான சில மரமண்டைகளுக்கு கிராமிய அடிப்படை வாழ்வியல் தொடர்பான சிந்தனை கொஞ்சமும் இல்லை என்பது இக்கட்டிடத்தின் பின்னணியையும் அக்கரைப்பற்றுப் பிரதேசசபைக் கிராமிய மக்களின் வாழ்வு நிலையையும் பார்க்கும்போது தெளிவாகத் தெரிய வருகிறது.

மேலும் அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினரும் சோஷா நிறுவனத்திலுள்ளவருமான ஒருவர்; ஆலிம் நகர் பொது மக்களுக்குச் சொந்தமான இப்பல்தேவைக்கட்டிடத்திற்கு தனது மாமியாவின் பெயரில் உறுதி முடித்துவைத்துக்கொண்டு உரிமைகொண்டாடி வருகிறார்.

அதனாலேயே இக்கட்டித்திற்கு நிதி ஒதுக்கி புனர்நிர்மாணம் செய்து மக்களுடைய பாவனைக்கு இதனை விட முடியாயமல் உள்ளதாகவும் ஒரு செய்தி எட்டியுள்ளது.

எனவே மேற்படி விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் பிரதேச சபையின் தவிசாளர் ஏம்.ஏ.றாசீக் அவர்களும் தனது மேலான சமூகஉணர்வினைத் தட்டியெழுப்பி ஆலிம்நகருக்கு சொந்தமான பல்தேவைக்கட்டிடத்தினை புனர் நிர்மாணம் செய்து ஆலிம்நகர் மக்களிடமே ஒப்படைப்பதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மக்கள் சார்பில் தயவாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் பிரதேச சபை
அக்ரைப்பற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *