Headlines

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நியமனம்

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால்  ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக தர்மசிரி வண்டார எக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கனசே சிரச தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக கடமையாற்றியவா். இவா் பட்டதாரியும் ஊடக டிப்ளோமா பட்டப்படிப்பை ஸ்ரீ ஜெயவா்த்தன பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா்.

Read More

மைத்திரியின் ஆட்சியில் முஸ்லிம் ஆளுநர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை

அஸ்ரப் ஏ சமத் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவில் 06 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனா். வடக்கு – பல்லியக்கார, கிழக்கு – ஒஸ்டின் பொ்னான்டோ, சப்ரகமுவ – வி.எம்.ஏ. ஆர். பேரேரா, மத்திய மாகாணம் – சுரங்கினி எல்லாவல , வடமத்தி – பி. திசாநாயக்க, ஊவா மாகாணம் – சட்டத்தரணி ஜயசிங்க ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இம்முறை முஸ்லீம் கள் ஆளுனராக நியமிக்கப்படவில்லை. கடந்த 10 வருடமாக அலவி மௌலான பதவி வகித்தாா். இவர் முன்னாள் ஜனாதிபதி…

Read More

ஒப்பாரி வைக்கும் மஹிந்த ; முக்கிய புள்ளிகளுக்கு அவசர கடிதம்

பர்வின் சனூன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் படுதோல்வியடைந்து சிறுபான்மை மற்றும் பெருபான்மை மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து ஒதுங்கியிருப்பது அனைவரும் அறிந்த விடயமே. இது இவ்வாறு இருக்க, சற்றுமுன் தேர்தலுக்கு முன்னும், பின்னும் அவருடன் இருந்து பிரிந்து சென்ற முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, “தான் மிகவும் நல்லவர் எனவும், தான் ஒரு தவறும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய மகன்கள்…

Read More

பஸ் கட்டணம் குறைப்பு

பஸ் கட்டணங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 8 தொடக்கம் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதன்படி குறைந்தளவு கட்டணமாக இருந்த  9 ரூபா 8 ரூபாவாக குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி சாதனை

ஏ.எஸ்.எம்.ஜாவித் 1990ம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு துறைகளிலும் நாடளாவிய ரீதியில் புகழ் பூத்த இக்கல்லூரியானது 1990ம் ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் இப்பாடசாலை பல பின்னடைவுகளைச் சந்தித்தது. இருந்தும், ஊர் பிரமுகர்களின் விடா முயற்சியால் 2011ம் ஆண்டு விஞ்ஞான, கணித, வர்த்தகப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டது. 2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஒரு மருத்துவப் பீடம் உட்பட 10 பேர் விஞ்ஞானப் பிரிவிலும், ஒரு பொறியியல் பீடம் உட்பட 6 பேர் கணித பிரிவிலும்…

Read More

வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் கைது

வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆனமடுவ ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஆடிகம – கரநாயக்கம ஐதேக அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

மட்டக்களப்பில் 5 நாட்களுக்கு பகல் நேர மின்வெட்டு

ன்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் 5 நாட்களுக்கு பகல் நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பின்வரும் திகதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது. 1. 2015.01.27 – 9.00 – 17.00 – வக்கியல, பாலையடிவெட்டை, நெல்லிக்காடு, காக்காச்சிவெட்டை மற்றும் சின்னவத்தை 2. 2015.01.28 – 9.00 – 17.00 – ஓட்டமாவடி, ஹைய்ரத் வீதி, மக்களடி வீதி மற்றும் வாழைச்சேனை. 3….

Read More

மீண்டும் இயங்கும் பேஸ்புக்

ஆசிரியர் பீடம் சரியாக இலங்கை நேரப் படி பி.ப 12 மணி முதல் பி.ப 12:40 இற்கு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. எதற்காக பேஸ் புக் தடை பெற்றது என இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை

Read More

அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்: ரணில் விக்ரமசிங்க

குரோதம் வன்முறைகளில்லாத புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் ஏற்படுத்த நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அனைத்துக்கட்சிகளினதும் ஒத்துழைப்பு இதில் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவை மக்களால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு பொலனறுவை நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்…

Read More

நண்பர்கள் மூவரும் ஒரே விபத்தில் பலி – எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்….

எம்பிலிப்பிட்டிய-இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், மதிலில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 1.05 க்கு இடம்பெற்ற இந்த விபத்தில், 19 வயதான இளைஞர்கள் இருவரும் 21 வயதான இளைஞனுமே பலியாகியுள்ளனர். எம்பிலிப்பிட்டியிலிருந்து இரத்தினபுரியை நோக்கி பயணித்துகொண்டிருந்த போதே கல்வங்கு எனுமிடத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சவுதி அரேபியாவில் வபாத்தான கலாவெவ மாஹிர் இன் ஜனாஸா இன்று அங்கு அடக்கம் செய்யபடுகிறது

அஸ்ஸலாமு அலைக்கும் கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த மாஹிர் சவுதி அரேபியாவில் வபாத்தானது தொடர்பில் நாம் என்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். அவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 27/1/2015 செவ்வாய் கிழமை மாலை ஹப்ருல் பாத்தின் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

Read More