Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீன் சவுதியிலிருந்து நாடு திரும்பினார்




ஊடகப் பிரிவு

சவுதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள றியாத் பயணமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று(26) அதிகாலை நாடுதிரும்பினார்.

வெள்ளிக்கிழமை இரவு றியாத் பயணமான அமைச்சர் அந்த நாட்டின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கை அரசாங்கத்தினதும்.முஸ்லிம் மக்களினதும் கவலையினை தெரிவித்துள்ளார்.

அதே வேளை இன்று மாலை 4.00 மணிக்கு மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் வரவேற்பு நிகழ்விலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வினையிட்டு முசலி பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *