Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு முசலி பிரதேச மக்கள் வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு (படங்கள் இணைப்பு)

இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கை அரசியலில் புரட்சிகரமான பணியினை ஆற்றியதுடன்,கடந்த காலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து விதமான சதி நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சிறுபான்மை மக்களையும் ஓரணியில் இணைத்துக் கொண்டு புதிய ஆட்சி மாற்றத்திற்கான பங்காளியாக பரிணமித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில் வணிகத் துறை ,வாணிப அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு இன்று மாலை மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்கள் வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு…

Read More

ஹூனைஸ் பாருக் தான் ஏறிவந்த ஏணியினை உதைத்து விட்டு ஏறவும்,முடியாமலும்,இறங்கவும் முடியாமலும், -அமீர் அலி

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த 9 ஆம்; திகதி நாம் இந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று இருப்போமெனில் எமது சமூகத்தின் தலைவிதி மாறியிருக்கும் நாம் எங்கே போயிருப்போம் என்று தெரியாது என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் சமூகத்தின் தேசிய சொத்து என்றும் கூறினார். முசலி சிலாவத்துறையில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருக்கின்ற போது மேற்கண்டவாறு கூறினார்….

Read More

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறு இன்ற உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கோட்டை நீதவான் திலினி கமகேயினால் பிறப்பிக்கப்பட்டது.அல் – குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டேலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார உட்பட பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகள்…

Read More

மத்திய வங்கி ஆளுநராக மகேந்திரன் நியமனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிபார்சின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநராக  அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார். அர்ஜுன் மகேந்திரன், கடந்த 30 வருட காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நிதி நிறுவனங்களில் பொறுப்பான பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் தொடர்பான பட்ட பின் படிப்பை மேற்கொண்டுள்ளார். மேலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த 2002-2004வரையிலான காலப்பகுதியில்  இலங்கை முதலீட்டு…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் சவுதியிலிருந்து நாடு திரும்பினார்

ஊடகப் பிரிவு சவுதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள றியாத் பயணமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று(26) அதிகாலை நாடுதிரும்பினார். வெள்ளிக்கிழமை இரவு றியாத் பயணமான அமைச்சர் அந்த நாட்டின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கை அரசாங்கத்தினதும்.முஸ்லிம் மக்களினதும் கவலையினை தெரிவித்துள்ளார். அதே வேளை இன்று மாலை 4.00 மணிக்கு மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்களினால்…

Read More

‘என்னை யும் எனது குடும்பத்தையும் கொலை செய்திருப்பார்கள்’ – ஜனாதிபதி மைத்திரி

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வியைத் தழுவியிருந்தால் கொலை  செய்திருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் பாரிய நெருக்குதல்களை எதிர்நோக்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தால் தமது பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் பிள்ளைகள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.  மாற்று வழியின்றியே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வாறு செய்திருக்காவிட்டால் 100…

Read More

தமிழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று கொடுப்பதன் மூலமே மாற்றத்திற்கு அர்த்தம் கிடைக்கும்

சிங்கள பெளத்த உரிமைகளை பாதுகாத்து நாட்டை பாதுகாக்க விரும்பி மாற்றத்தினை மக்கள் ஏற்படுத்தியதைப்போல் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை வென்று கொடுப்பதன் மூலமே தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமானது மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். கால மாற்றத்திற்கேற்ப இளைஞர்களின் சக்தியினூடாக ஒரே கூரையின் கீழ் இணைவோம் எனும் தொனிப்பொருளில் நேற்று இளைஞர்…

Read More

பசில் ராஜபக்ஸவை பிடிக்க இன்டர்போல் போலிஸ் ஒத்துழைப்பு

சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கடந்த அரசாங்கத்தின் சில முக்கிய அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றவர்களை மீள அழைத்து விசாரணை…

Read More

வெள்ளவத்தை தொடர்மாடியில் இருந்து பாத்திமா சப்னா விழுந்து உயிரிழந்தது தொடர்பில் நீடிக்கும் மர்மம்.

வெள்ளவத்தை – ஹெவ்லொக் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து நான்கு வயதான பாத்திமா சப்னா என்ற 4 வயதான குழந்தை தவறிவிழுந்து உயிரிழந்தமை தொடர்பிலான மரண விசாரணை இடம்பெற்றுள்ளது. உயரமான கட்டிடத்திலிருந்து வீழ்ந்தமை காரணமாக குழந்தையின் உடலில் உட்பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக உயிரிழப்பு ஏற்பட்டதாக மரண விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. வத்தளை மாபோல பிரதேசத்திலிருந்து 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது….

Read More

அபிவிருத்திகளை ஆராய புதிய குழு – ரணில் தலைமை

மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய குழு ஒன்று நியமனமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுக, நகர அபிவிருத்தித்திட்டம் , வடக்கு அதிவேகப்பாதை போன்றன பொது வசதிகள் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பிரதமர் ரணில் விக்கிமசிங்கவை தலைவராக கொண்டு இயங்கும் என்றும் அவருடன் எரிசக்தி மின் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார மற்றும்…

Read More

எனது மகனை தாக்கியது மகிந்தவின் மகன் யோஷிதவே ; மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷத ராஜபக்சவே எனது மகனைத் தாக்கியுள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதி ஆகியவற்றில் தனது மகன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. மாலக்க சில்வா யோஷிதவின் பாதுகாப்பாளர் ஒருவரை எச்சரித்திருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே எனது மகன் தாக்கப்பட்டார். எனினும் முன்னாள் ஜனாதிபதிக்கு குறித்த தாக்குதல்…

Read More

இந்தியாவில் ஒபாமாவிற்கு செங்கம்பள வரவேற்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கு, இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியை சென்றடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவரது பாரியாரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் வரவேற்கப்பட்டனர். இன்று மாலை பராக் ஒபாமாவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஹைதராபாத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம், இருதரப்பு வர்த்தகம், அணுசக்தி உடன்பாடு, காலநிலை மாற்றம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இரு…

Read More