Headlines

மைத்திரி அமைச்சரவை நாளை பதவியேற்பு(?)




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற 10 அமைச்சர்கள் மற்றும் 25 பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே பதவியேற்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோடு கலந்தாலோசித்து அமைச்சர்கள் குழுவை இறுதி முடிவு செய்யவார் என்று தெரிகிறது.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்த முக்கிய அமைச்சர்கள் பலரும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாவும், அவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *