Headlines

அலைபேசியூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துக




சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதைத் தவிர்க்கு மாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்களிப்புக்கு 48 மணிநேரத் துக்கு முன்னர் செய்யப்படும் இவ்வா றான பிரசாரங்கள் தேர்தல் சட்டங் களை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் கட்சிகளையும் வேட்பா ளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *