Headlines

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு ; கொலையா? எனச் சந்தேகம்




வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது
மகாரம்பைக்குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான டெனி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கனகராயன்குளத்தில் நீண்டகாலமாக இவர் தங்கியிருந்து மேசன் வேலை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் தங்கிநின்று வேலை செய்வது வரும் இவரைக் சந்திப்பதற்காக அயல் வீட்டார் ஒருவர் சென்றவேளை இவர் சடலமாக காணப்பட்டார்.

இதனையடுத்து உறவினர்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *