Headlines

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் இன்று விஜயம்!

மன்னாருக்கு நேற்று  விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்றைய தினமும் (06) மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.

அந்தவகையில், கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சிக்கட்டி, ஹுனைஸ் நகர், கொண்டச்சி, சிறுக்குளம், பூநொச்சிக்குளம், மணற்குளம் மற்றும் இலந்தைக்குளம் ஆகிய கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தலைவருக்கு, அப்பிரதேச மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.  

அத்துடன், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்ட தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த மக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.