Headlines

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடி அம்பலப்படுத்தப்படும் -நவீன்




சீன அபிவிருத்தி தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசு சீனாவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் ஜனாதிபதியையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (O)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *