Headlines

ஊவா முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் சாவு




ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானது.இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *