Headlines

அரசாங்கத்திற்கு ஆப்பு! சம்பிக்க, கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!

அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவும் பதவி விலகியுள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நேற்று (17) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கோபம் இல்லை என்றும் நாட்டுக்காகவும் பௌத்த சமயத்திற்காகவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

Read More

முஸ்லீம்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்; ஹசன் அலி

முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையென்றால் அவர்களின் கோரிக்கைக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். அம்பாறைக்கு தனி மாவட்டச் செயலகமொன்றை அமைத்துக் கொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் உறுதிமொழி வழங்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமன்றி, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பொது வேட்பாளரா இல்லையா என்பது பற்றி எமக்குப் பிரச்சினை கிடையாது….

Read More

ஊவா முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் சாவு

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முதலமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானது.இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More

மூன்று தடவைக்கு மேல் தவறு விட்டால் அடையாள அட்டை இரத்து

மூன்று தடவைகளுக்கு மேல் தவறுவிடும் தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சேவை அடையாள அட்டையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் செய்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பயணிகளின் பிரதான முறைப்பாடாக பஸ்கள் நேர தாமதத்தில் செல்கின்றமை, மிகுதி பணம் வழங்காமை மற்றும் பஸ்ஸுக்குள் அதிக…

Read More

ஆட்சியில் குறைப்பாடுகள் இருந்தாலும் மஹிந்தவுக்கே ஆதரவு; திஸ்ஸ விதாரண அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு லங்கா சம சமாஜ கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ள அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஏற்று கொள்கின்றோம். எனினும் நாட்டை முன்னேற்ற பாதையில் இந்த அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. நாட்டில் ஊழல் மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. செலவந்நத தரப்புக்களுடன் இணைந்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஊழல் மிகுந்த நிலைமை உருவாக சாத்தியம் உள்ளது….

Read More

ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல்

செக் குடியரசில் வெல்வட் புரட்சியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அந் நாட்டின் ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாகவே அவர் மீதான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. செக் குடியரசில் கம்பியூனிஸ்ட் ஆட்சி நிறைவுக்கு வந்தததை நினைவு கூறும் விதமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி மீதும் முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

Read More

ஒழுங்கு முறையற்ற விதத்தில் ஐ.நா.விசாரணையாம்; இலங்கை அதிருப்தி

இலங்கை மீது ஒழுங்கு முறையற்ற விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்வதாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவானது உத்தியோகபூர்வமற்ற முறையில் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளரிடம் தமது எதிர்ப்பை வெளியிட்டார். இணையத் தளத்தில் காலக்கெடு அக்டோபர் 30 எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர்…

Read More

நிறைவேற்று அதிகாரத்தினை ஜனாதிபதியினால் நீக்க முடியாது: நிமல் சிறிபால டி சில்வா

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதியினால் நீக்க முடியாது. அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றிற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கோருவோர் அதனை பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு முன்வைக்க வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

Read More

சட்டம் தெரியாதெனக் கூறி மன்னிப்பைப் பெற முடியாது: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

பழுலுல்லாஹ் பர்ஹான் சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் முறைமை என்பதால் எவரும் மட்டுப்படுத்த முடியாது. சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார். சர்வதேச உளவியல்சார்…

Read More

புலமைப் பரிசில் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் நேற்று (17) வெளியிடப்பட்டது. இதற்கமைய, கொழும்பு, கண்டி மற்றும் மாத்தளைக்கு 152 வெட்டுப்புள்ளியாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு 150 வெட்டுப்புள்ளியாகவும் அமைந்துள்ளது. இதனைத்தவிர, மன்னார், முல்லைத்தீவு, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு 149 வெட்டுப்புள்ளியாக காணப்படுகின்றது. -News1st-

Read More