Headlines

பேசாலை கடற்கரை பூங்கா திறப்பு விழா!




மன்னார் பிரதேச சபைத்  தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில்,  வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பேசாலை கடற்கரை பூங்கா (Beach) திறப்புவிழா நேற்று (09) நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்

இந் நிகழ்வில் உறையாற்றிய தவிசாளர், பேசாலை கிராமமானது பல அரசியல்வாதிகளையும், பல பட்டதாரிகளையும் உருவாக்கிய கிராமம், இன்று பல தேவைகளைக் கொண்ட ஒரு கிராமமாக காணப்படுகின்றது. இக் கிராமத்திற்கு பாதைகள், பொதுச்சந்தை மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவை தேவைப்படுகின்றது. எனவே, அவற்றை விரைவாக செய்து தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *