Headlines

மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றவும் – மகிந்த




இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளதாகஇ பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு, இலங்கை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து,தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனு ஒன்றை இலங்கை நீதிமன்றத்தில் இந்திய அரசு இன்று தாக்கல் செய்கிறது. இதன் மூலம் சட்டரீதியாக தமிழக மீனவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும் என மத்திய, மாநில அரசுகள் நம்புகின்றன.

இந்நிலையிலேயே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளதாக டுவிட்டரில் சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *