Headlines

புதுக்குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!





மன்னார் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் எஸ்.எம்.எம்.முஜாஹிர், புதுக்குடியிருப்பு வட்டார மக்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்!

உலமாக்களே, புத்திஜீவிகளே, ஆசிரியர்களே, பள்ளி பரிபாலன சபைத் தலைவர்களே, நிர்வாக உறுப்பினர்களே, கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மகளிர் சங்கம், இளைஞர் அமைப்பு, விளையாட்டுக் கழகம் மற்றும் மீனவர் சங்கத் தலைவர்களே, நிர்வாக உறுப்பினர்களே, அரச ஊழியர்களே, உறவுக்காரர்களே, முதியவர்களே, தாய்மார்களே, தந்தையர்களே, நண்பர்களே “எனது பெரும் கௌரவத்துக்குரிய புதுக்குடியிருப்பு வாழ் உறவுகளே!”

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் என்னை வெற்றிபெறச் செய்து, உங்களின் சேவையாளனாக என்னை ஏற்றுக்கொண்டமைக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். (அல்ஹம்துலில்லாஹ்)

இந்த வெற்றி என்பது எனது வெற்றியல்ல. இது எமது ஊரின் வெற்றி. உங்களின் வெற்றி. நாளைய எமது தலைமுறையின் வெற்றி. நமது தலைவர் மீது நீங்கள் கொண்ட உயரிய பாசத்தின் வெற்றி. இந்த வெற்றியின் முழுச் சொந்தக்காரர்கள் நீங்களே. என்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

இதே சமயம் தேர்தல் காலங்களிலும், வாக்களிப்பின் போதும், எனக்கு எதிராக செயல்பட்டவர்களையும் நான் மதிக்கின்றேன். உங்களையும் இருகரங்களை நீட்டி அழைக்கின்றேன். மன்னார் நகரிலே ஆச்சரியமான புதுக்குடியிருப்பை கட்ட முன்வாருங்கள்.

எமது ஊரையும், எமது மக்களையும் என்னிலிருந்து எதுவுமே பிரிக்க முடியாது என்ற நம்பிக்கையான நல்ல செய்தியுடன், எனது பரிபூரண முயற்சியாலும், எமது தலைவரின் வழிகாட்டலுடனும், எதிர்காலத்தில் உங்களுடைய அனைத்து விடயங்களிலும் நான் உங்களுடன் இருப்பேன்.

இறைவன் நமது வெற்றிக்கு துணை புரிந்தது போன்று, நாளைய எமது ஊரின் அபிவிருத்திக்கும் துணைபுரிவானாக.

உங்களுக்காகவே நான் என்றும் அன்புடன் உங்கள் மகன் உங்களின் சேவையாளன்

எஸ்.எச்.எம்.முஜாகிர்

மன்னார் பிரதேச சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *