Headlines

‘முஸ்லிம்களை குழுக்களாகப் பிரித்துள்ளது உள்ளுராட்சித் தேர்தல்’ சேகு இஸ்ஸதீன் வேதனை!





-ஊடகப்பிரிவு-

“உள்ளுராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது” – என வடக்கு, கிழக்கு மாகாண சபை முன்னாள் எதிர்க்;கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எச். ஏம்.அமீர் தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“கிழக்கு மாகாணத்திலுள்ள அத்தனை முஸ்லிம் பிரதேசங்களிலும் நடக்கின்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் முஸ்லிம்களைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றன. வேறு வேறு குழுக்களில் வைத்துக் கொண்டிருக்கின்றது. அது மிகவும் வேதனையான விடயம்.
உள்ளுராட்சியின் ஆட்சி அதிகாரங்களை சிறந்த முறையில் செய்ய வேண்டும என்பதற்காக போட்டி நடைபெறுகின்றது. இதன் விளைவாக முஸ்லிம்கள் பிளவுபட்டுவிடக்கூடாது. முஸ்லிம்களின் பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டுமாக இருந்தால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டை ஆளும் அரசியலமைப்பு சட்டம். இந்த அரசியலமைப்புச் சட்டத்திலே சில, தவறுகள், குறைபாடுகள் காணப்படுகின்றன. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்த அரசியலமைப்பு சட்டத்தை திருத்தவேண்டும் என்று இந்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்தது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள் என்றார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *