Headlines

அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுக்கடன் வழங்கிவைப்பு!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான அசார்தீனின் தலைமையில், அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு, வீட்டுக்கடன் வழங்கி வைக்கப்பட்டது.

குருநாகல் மாவட்ட காரியாலத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாக ஒரு குழுவினருக்கு இந்தக் கடன் தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *