Headlines

இரண்டு மாதத்திற்குள் 1300மில்…. ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி





இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்றுவரை (05.11.2017) 20ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டரிசியானது கிலோகிராம் 74ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் 25கிலோவிற்கு மேற்பட்ட அரிசியை கொள்வனவு செய்பவருக்கு கிலோ கிராம் 73ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ள 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசியில் 15ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவுக்கான கட்டளைகள் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும்  குறித்த தொகையான அரிசியானது இந்தமாத நடுப்பகுதியில் வந்து சேருமென எதிர்பார்க்கப்படுவதாகவும்  அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 926மில்லியன் ரூபாவை செலவிடுவதாக  அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *