Headlines

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் நாளை மறுநாள் கொழும்பில்





உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இவ்வருடம் “டிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் உரிமை” என்ற கருப்பொருளில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நாளை மறுதினம் 15 ஆம் திகதி 3 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் பாவனையாளர் அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
அதிதிகளாக தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவும் கைத்தொழில் மற்றும் வணிக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவும் கலந்து கொள்வதாக பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *