Headlines

கோழி இறைச்சி, மற்றும் வெள்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு துரித நடவடிக்கை

அமைச்சரின் ஊடகப்பிரிவு கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஹஸித திலகரத்ன மேலும் தெரிவித்தார். கோழி இறைச்சி…

Read More

”தீவிரமாகப் பரவிவரும் டெங்கைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்” ராஜிதவிடம் ரிஷாட் கோரிக்கை

  ஊடகப்பிரிவு கிண்ணியா பிரதேசத்தை டெங்கு பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அங்கு பரவி வரும் டெங்குக் காய்ச்சலினால் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை நீக்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலண்டனுக்கு சென்றுள்ள அமைச்சர் ரிஷாட் கிண்ணியா நிலவரங்கள் குறித்து அமைச்சர் ராஜிதவிடம் விளக்கினார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ்…

Read More

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் நாளை மறுநாள் கொழும்பில்

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இவ்வருடம் “டிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் உரிமை” என்ற கருப்பொருளில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நாளை மறுதினம் 15 ஆம் திகதி 3 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் பாவனையாளர் அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார். அதிதிகளாக தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவும்…

Read More

தரமற்ற தீப்பெட்டிகளை தயாரித்த தொழிற்சாலைகள் கண்டியில் சீல் வைப்பு

ஊடகப்பிரிவு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட, சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியான, 1,590,000 தரமற்ற தீப்பெட்டிகளை, கண்டியின் இரு வேறு தொழிற்சாலைகளிலிருந்து  கைப்பற்றியுள்ளதாக,  நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொதிகளில், 1,440,000   சிறிய தீப்பெட்டிகள் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அவற்றின் சந்தைப்பெறுமதி 8,640,000 ரூபாய்…

Read More