Headlines

குடும்ப அரசியலை விரட்ட இந்து – சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்: பொது பல சேனா




நாட்டுக்குள் நிலவும் குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் இலங்கையை ஆட்சி செய்யும் கருப்பு வெள்ளையர்களை விரட்டியடிக்கவும் இந்து – சிங்கள இனத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

அதேபோன்று, இந்த நாட்டின் மீதும் இனத்தின் மீதும் பற்றுள்ள இந்து – சிங்கள இளைஞர், யுவதிகளை அரசியலில் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிருளப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *