Headlines

எயார் லங்கா விமானத்தில் கோளாறு: 122 பயணிகள் உயிர் தப்பினர்

கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை விமான நிலைய தகவல்களை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விரைவாக செயற்பட்ட விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். இதனையடுத்து விமானத்தில் பயணித்த 122 பயணிகளும் உயிர் தப்பியுள்ளதுடன்  பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த விமானத்தின் ஊடாக…

Read More

குடும்ப அரசியலை விரட்ட இந்து – சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்: பொது பல சேனா

நாட்டுக்குள் நிலவும் குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் இலங்கையை ஆட்சி செய்யும் கருப்பு வெள்ளையர்களை விரட்டியடிக்கவும் இந்து – சிங்கள இனத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். அதேபோன்று, இந்த நாட்டின் மீதும் இனத்தின் மீதும் பற்றுள்ள இந்து – சிங்கள இளைஞர், யுவதிகளை அரசியலில் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கிருளப்பனையில் அமைந்துள்ள பொது பல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே…

Read More

இலங்கையில் பட்டினி நிலை அபாயக்கட்டத்தில்

இலங்கையில் பட்டினி நிலை 39 ஆவது இடத்தில் உள்ளதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் உலகளாவிய ரீதியில் 43 இடத்தில் இருந்த இலங்கை இந்த வருடத்தில் 39வது இடத்துக்கு முன்னேறி இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை பட்டினி நிலை தொடர்பில் இந்தியா 55 வது இடத்திலும், பாகிஸ்தான் 57 வது இடத்திலும், நேபாளம் 44வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. (u)

Read More

100 கோடி வழங்க கோரி சுவாமிக்கு எதிராக வழக்கு

பா. ஜ.க.வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியிடம்  100 கோடி ரூபா நஸ்டஈடு கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நான்தான் ஆலோசனை கூறினேன்.. அதன்படியே அவரும் செய்து வருவதாக தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் சுவாமி பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இலங்கை கடற்படை சேதப்படுத்தி, கைப்பற்றிய 102 தமிழக மீனவர்களின் படகுகளுக்கு…

Read More

குழந்தையின் உயிர்காத்த படையினர்

 முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் 30 அடி ஆழமான வீட்டு கிணற்றுனுள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். பிரசாதினி ஜனிஸ்கர் என்ற ஒரு வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தை தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்ததை அவதானித்த உறவினர்கள் கூச்சலிட்டுள்ளனர். இந்த நிலையில் அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சாதூரியமாகச் செயற்பட்டு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர். தற்போது காப்பாற்றப்பட்ட குழந்தை முல்லைத்தீவு…

Read More

16வயது முடிந்தால் தே.அ.அட்டை பெறுங்கள்: இல்லையேல் தண்டம்

இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் தண்டம் விதிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார் எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- அரசாங்கத் திணைக்களம் உட்பட வங்கி போன்ற பல சேவை மையங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டை மிக முக்கியமானது. இதனால் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 16 வயது முடிவடைந்து ஒரு…

Read More

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட முடியாது; ஐ.நா கைவிரிப்பு

காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு முடிவு ஏற்படுத்த, இந்தப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்தது. காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ், இம்மாதம்; 12ஆம் திகதி ஐ.நா.பொதுச் செயலாளர்…

Read More

கிளிநொச்சி நகரின் பிரதான மின்விளக்குகளை சூரியமின்கல விளக்குகளாாக மாற்ற ஜனாதிபதி உத்தரவு

பாறுக் சிகான் கிளிநொச்சி நகரின் பிரதான வீதியில் சூரியமின்கல வீதி விளக்குகளை பொருத்துமாறு மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் (13) இடம்பெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இந்தப் பணிப்புரையை விடுத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி நகர்பகுதியிலுள்ள வீதி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிராத காரணத்தினால் மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை…

Read More

ஜனாதிபதி யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்   யாழ் மாவட்ட  சிறிலங்கா சுதந்திர தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். வட மகாண சபை உறுப்பினர் மற்றும் யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன்அங்கு வரவேற்றதுடன் அங்கு ஜனாதிபதியாழ் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 315 மாணவா்களுக்கு புததகப்பைகள் மறறும் பள்ளி உபகரணங்களை வழங்கி வைத்தார்.  இந்நிகழ்விற்கு ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

அபிவிருத்தியில் மூழ்கும் வன்னி…… அமைச்சர் றிஷாதுக்கு மக்கள் நன்றி ( படங்கள் இணைப்பு )

ஊடக பிரிவு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம்    மன்னார் மாவட்டம் – அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மானம் செய்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 220 வீடுகளுகளை நிர்மாணிப்பதற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், வழங்கப்பட்ட குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான…

Read More

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 320 ரூபாயில் இரயிலில் பயணிக்கலாம்..!

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளின் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன. குளிரூட்டப்பட்ட கடுகதி  ரயில் சேவையில் பதிவுசெய்து பயணிப்பதற்கு   1,500 ரூபாய்யும் முதலாம் வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு 900 ரூபாயும் இரண்டாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  800 ரூபாயும் மூன்றாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  500 ரூபாய் மற்றும் மூன்றாந்தர வகுப்பில் சாதாரணமாகப் பயணிப்பதற்கு  320 ரூபாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது”

சட்டத்தை காலில் உதைத்து தள்ளிவிட்டு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது என  ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் போட்டியிடுவது பொது வேட்பாளரா அல்லது வேறும் ஒர் வேட்பாளரா என்பதனை விடவும், சட்டவிரோத தேர்தலை நடத்த அனுமதிக்கக் கூடாது. அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்படுவது அரசாங்கத்திற்கு வாடிக்கையாகியுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தலையும் அறிவிக்க அரசாங்கம் தயாராகி…

Read More