Headlines

100 கோடி வழங்க கோரி சுவாமிக்கு எதிராக வழக்கு




பா. ஜ.க.வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியிடம்  100 கோடி ரூபா நஸ்டஈடு கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நான்தான் ஆலோசனை கூறினேன்.. அதன்படியே அவரும் செய்து வருவதாக தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் சுவாமி பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை கடற்படை சேதப்படுத்தி, கைப்பற்றிய 102 தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடாக ரூ. 100 கோடியை சுப்பிரமணியன் சுவாமி தருவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *