Headlines

அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் நாடாளுமன்றில்




அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் மாதத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் அமைப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழு, புதிய அரசியல் அமைப்பு குறித்த ஆரம்பக் கொள்கைகள் அனைத்து குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதன்படி, இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்கள் என இரண்டு வகையின் அடிப்படையில் நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இறுதியாக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *