Headlines

பலசேனாவின் அச்சுறுத்தல்: ஜனாதிபதி மஹிந்தவிடம் முறையீடு




பொதுபல சேனாவின் அச்சுறுத் தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ­விடம் முறைப்பாடு செய்துள்ளது.
பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதி ராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய மியன்மார் பெளத்த பிக்கு அஸின் விராதுவிற்கு விசா வழங்கக்கூடாது என ஜனாதிபதியிடம் முஸ்லிம் பேரவை அண்மையில் கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கை தொடர்பில் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ் லிம் பேரவைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விராது தேரரை நாட்டுக்குள் பிர வேசிக்க அனுமதிக்க வேண்டாம் என கோரும் அதிகாரம் முஸ்லிம் பேர வைக்குக் கிடையாது என அவர் தெரி வித்துள்ளார்.

அண்மையில் ஜூன் மாதம் அளுத்கம, பேருவளை போன்ற இடங்களில் இடம்பெற்ற துர்ப்பாக்கியமான சம்பவங்கள் ஏற்பட பொதுபலசேனா போன்ற கடும்போக்குடைய இயக்கங்களே காரணம் என முஸ்லிம் பேரவை குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெளத்த கடும்போக்குவாதிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

புனித குர்ஆன் தொடர்பில் ஞானசார தேரர் பிழையான கருத்துகளை வெளியிட்டு வருவதாக ஏற்கனவே நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தி வருவதாக முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *