Headlines

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்பில்!




நல்லெண்ண அடிப்படையில் அவுஸ்திரேலியக் கடற்படையின் ‘எச்.எம்.ஏ.எஸ் பேர்த்’ எனும் ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று கடந்த 19 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த மேற்படி அவுஸ்ரேலியப் போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடற்படையினருடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் அவுஸ்திரேலியப் போர்க்கப்பலின் மாலுமிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

குறிப்பிட்ட இக்கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *