Headlines

மேல்மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப ஜனாதிபதி அறிவுரை!




மேல்மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புமாறு மேல்மாகாண சபையின் கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல்மாகாணத்தில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக 2014ம் ஆண்டு பரீட்சை ஒன்று நடைபெற்றதாகவும், ஆனால் குறித்த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இதுவரை ஆசிரியர்களாக நியமிக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *