Headlines

இலங்கை பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு காரணம் கூறும் அமெரிக்கா




சர்வதேசமே இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில்  உள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு சமூகமே பொறுப்பாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் 27வது அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது.இலங்கை உட்பட்ட சில நாடுகளில் உரிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அமெரிக்கா இதன்போது தெரிவித்துள்ளது.இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளை தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட அமெரிக்கா, ருவண்டா, டார்பூர், சிரியா போன்ற நாடுகளிலும் இதேநிலையை காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனும் மனித உரிமை மீறல்களை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *