Headlines

அதிவேக நெடுஞ்சாலை இன்று இலவசம்




தெற்கு அதிவேகப் பாதையின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடைப்பட்ட பாதையை பொதுமக்கள் இன்று இலவசமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

இதன்மூலம் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *