Headlines

லக்கலை விவகாரம்: விசாரணைகள் தீவிரம்




லக்கலை பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன ஆயுதங்கள் தொடர்பாக 100 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லக்கலை பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் உட்பட பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள மக்களிடமும் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காணாமல்போய் பின்பு மீட்கப்பட்ட ஆயுதங்கள் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் உள்ள கைரேகைகளை இனங்காண்பதற்காகவே குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

லக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி ஆயுதங்கள் காணாமல்போய் பின்னர் அருகில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *