Headlines

ஹைட் மைதானத்துக்கு நானும் செல்வேன்: மஹிந்த




கூட்டு எதிரணியினரால் கொழும்பு, இப்பன்வெல ஹைட் மைதானத்தில் இன்று நடத்தப்படவுள்ள கூட்டத்தில், தான் கலந்துகொள்ளப்போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

‘பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாராதீர்கள். நான் ஹைட் மைதானத்துக்குச் செல்வேன்’ என்று அவர் அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹைட் மைதானத்தில் இன்று (17) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *